‘மனங்கவரும் ஏற்பாடுகள்’:கத்தாரைப் புகழ்கிறார் பிரான்ஸ் விளையாட்டமைச்சர்: அரை இறுதிப் போட்டியைக் காண மக்ரோனும் கத்தாரில்

Date:

கத்தாரின் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஏற்பாடுகள் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருப்பதாக பிரான்ஸின் விளையாட்டமைச்சர் அமெலி ஓடே கஸ்டேரா தெரிவித்துள்ளார்.

போட்டியின் ஆரம்பத்தின் போது கத்தார் அமீர் (ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி) ஹலோ எவ்ரிவன் என அனைவரையும் விளித்ததை மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்தமைக்காக கத்தாரை நாம் பாராட்டுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் இவர் கலந்து கொண்டிருந்தார்.

பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியுடன் இன்று நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

இந்தப் போட்டிகளைக் காணவென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று கத்தாருக்குப் புறப்படவுள்ளார்.

விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என முன்னதாக மக்ரோன் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...