இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் முறைப்பாடு இன்றி மக்கள் சார்பில் தலையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின்சார அமைச்சும் இலங்கை மின்சார சபையும் கூறியது போன்று ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் போது, மக்களை மேலும் ஒடுக்குவதற்கு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.