முன்னாள் பாப்பரசர் 16-ம் பெனடிக் உயிர்நீத்தார்!

Date:

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை தனது 95வது வயதில் இயற்கை எய்தியதாக வத்திகான் அறிவித்துள்ளது.

வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை 9.34க்கு அன்னாரது உயிர் இறையடி சேர்ந்ததாக வத்திகான் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகையின் இறுதி கிரியைகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகை, தனது வயது மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

குறிப்பாக கடந்த 600 ஆண்டுகளில் பாப்பரசர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தமை இதுவே முதற்தடவை என கூறப்பட்டது.

பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகையின் இந்த அறிவிப்பு, பலரையும் ஆச்சரித்திற்கு உட்படுத்தியிருந்தது.

பாப்பரசர் ஒருவர் இறையடி எய்வதற்கு முன்னதாக பதவி விலகிய பாப்பரசராக பாப்பரசர் 12வது கிரிகோரி இருந்துள்ளார்.

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...