சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பரப்பப்பட்ட இந்தச் செய்தியினால் எமது நற்பெயரும் அங்கீகாரமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இது அப்பட்டமான பொய்யாகும். எமது வைத்தியசாலைக்கு சேறு பூசுவதற்கென்றே இது இட்டுக்கப்பட்டது.
பொய்யை அடிப்படையாகக் கொண்ட இந்தக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பெருமளவிலான வளங்களும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன என வெஸ்டேர்ன் ஹொஸ்பிடல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பொதுமக்களிடமிருந்து பலாத்காரமாக கிட்னியைப் பிடுங்கி எடுத்ததாக இந்த வைத்தியசாலை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகையில்,
இல. 218, கொட்டா வீதி பொரள்ளையில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஹொஸ்பிடலுடன் சட்டவிரோதமான உடல் உறுப்பு கடத்தல் மோசடியை சம்பந்தப்படுத்தி பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட சேறுபூசல்கள் தொடர்பில் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
உடலுறுப்புக்களை விற்பனை செய்வதிலோ கடத்துவதிலோ வெஸ்டர்ன் ஹொஸ்பிடல் ஈடுபடவும் இல்லை. ஈடுபடப் போவதும் இல்லை.
பிரதான சந்தேக நபர் எனப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (சீசீடி) அறிவித்துள்ளது.
ஊடகங்கள் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் உண்மையை விரைவில் வெளிப்படுத்தும் என நம்புகிறோம்.
சிறுநீரக சிகிச்சைத் துறையில் வெஸ்டேர்ன் ஹொஸ்பிடல் முன்னணி வகிக்கிறது. இலங்கையின் முதலாவது சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை நாங்களே முதன் முதலில் மேற்கொண்டோம். டயலஸீஸ் செய்வதற்கான இயந்திரங்களை எமது சொந்த நிதியால் நாட்டுக்குத் தருவித்து 1984 இலே முதலாவது டயலிஸிஸ் சிகிச்சையையும் நாங்களே மேற்கொண்டோம்.
இன்று எம்முடன் பல்வேறு துறைகளிலும் பணிபுரிகின்ற 150 ஊழியர்களதும் வாழ்வாதாரங்களும் எந்த நோயாளிகளுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோமோ அவர்களின் வாழ்க்கையும் எமது இருப்பும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது.
எமது மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்டகாலப் பணியில் எமது சிறப்பான சேவை மற்றும் தரமான பணியாட்கள் மூலமாக நாம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம்.
எமது சேவைக் காலப்பிரிவில் 1200 க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளைச் செய்திருப்பதோடு 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் டயலிஸிஸ் சிகிச்சை செய்திருக்கிறோம்.
எமது மருத்துவமனைக்குக் கிடைத்த இந்த கீர்த்திகள் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியிருக்கக் கூடும். உதாரணமாக, ஈஸ்டர் தாக்குதல் நடந்த உடனேயே முக்கிய அரசியல்வாதி ஒருவர் ஸஹ்ரானின் சகோதரர் ரில்வான் என்பவருக்கு எமது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பரப்பப்பட்ட இந்தச் செய்தியினால் எமது நற்பெயரும் அங்கீகாரமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது அப்பட்டமான பொய்யாகும். எமது வைத்தியசாலைக்கு சேறு பூசுவதற்கென்றே இது இட்டுக்கப்பட்டது.
பொய்யை அடிப்படையாகக் கொண்ட இந்தக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பெருமளவிலான வளங்களும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.
இதேபோல சிக்கலில் மாட்டிவிடுவதற்காக தற்போது திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன.
நவம்பர் 18 ஆம் திகதியளவில், தமது கிட்னி கொடைக்குத் தரவேண்டியதாகக் கூறி உபகாரத் தொகையொன்றைக் கேட்டு சிலர் எமது வைத்தியசாலைக்கு கல்லெறிந்தனர்.
அவர்கள் கொடையாகக் கொடுத்தவற்றுக்குரிய பணத்தைத் தருமாறு அவர்கள் கோரினர். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் சட்டவிரோதமானவை எனவும் யாரும் தமது அவயவங்களை பணத்துக்காக பரிமாற முடியாது எனவும் எமது நிர்வாகத்தினர் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
அவர்களின் முழுக் கோரிக்கையும் பலப் பிரயோகமும் மற்றும் நிறுவனத்துக்குத் தீ வைத்தல், பணம் பறித்தல் போன்ற அச்சுறுத்தும் வகையிலான மிரட்டல்களும் அனைத்துமே சட்டவிரோதமானவை.
கொடையாளிகளிடம் இருந்து உறுப்புக்களைப் பெறுவதற்கு கடுமையான நடைமுறை உள்ளது. விருப்பத்துக்கு மாறாக யாருடைய உறுப்பும் பெறப்படுவதில்லை.
பேராசிரியர் ரவீந்திர பெர்ணான்டோ, மருத்துவ நிபுணர் ஒருவர், ஒரு சட்டத்தரணி அடங்கிய குழுவொன்றின் மூலம் தானம் கொடுப்பவர்களுடன் கலந்துரையாடப்படும்.
அதன் பின்னர் சுகாதார அமைச்சின் மூன்று கட்டங்களிலான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். எந்தவொரு நன்கொடையாளரும் மாற்று சத்திர சிகிச்சைக்கு முன்னர் தமது சம்மதத்தை மீளப் பெற முடியும்.
அறுவை சிகிச்சைக்கு. நன்கொடையாளர்கள் தங்கள் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன் கடுமையான சட்டத் தேவைகளுக்கு அவர்கள் இணங்க வேண்டும்.
நாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் ஏனைய ஐந்து தனியார் மருத்துவமனைகளும் நாம் பின்பற்றும் அதே நடைமுறைகளையே பின்பற்றுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பிலான ஊடகப் பரப்புரைகளும் உணர்ச்சியைக் கிளறும் தகவல்களும் பொய்யானவை என்பதோடு தீங்கிழைப்பவையாகவும் அமைந்துள்ளன.
இதில் ‘விதைப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு’ பணம் தருவதாக வாக்குறுதி அளித்தது போன்ற அருமையான கதைகளும் உள்ளன.
மருத்துவ ரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் சாத்தியமில்லாத மலடாக்கல் அறுவை சிகிச்சையை செய்ததாக டொக்டர் ஷாபி சிஹாப்தீன் மீது ஊடகங்கள் காட்டிய வெறித்தனத்தைப் போன்ற இவை அமைந்துள்ளன.
ஊடகங்களின் தற்போதை இந்தப் பரப்புரைகளையும் இதேபோல மக்கள் நம்புவதற்கும் இடமிருக்கிறது.
இது தொடர்பில் முறையாகச் செய்யப்படும் எந்த விசாரணைக்கும் மருத்துமனை பூரணமான ஒத்துழைப்பு வழங்கும்.
உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே வைத்தியசாலை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.