16,000 இராணுவ வீரர்களை குறைக்கும் அரசாங்கம் !

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

அதன்படி  இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்திருந்தார்.

எதிர்வரும் 31 ஆம் திகதிவரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சரியான அறிவிப்பை வழங்காத வெளிநாட்டில் இருப்பவர்களும் தத்தமது சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...