2021 ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து வருடா வருடம் நடாத்திவரும் அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் வைபவம் கொழும்பு, கல்ஹிஸ்ஸையிலுள்ள மௌண்ட்லாவன்யா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் உட்பட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின, தினமின ஊடகவியலாளர்கள் ஆறு பேருக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
இதில் சிறந்த ஊடகவியலாளருக்கான மக்களின் பிரச்சனைகளை கட்டுரைகள் வடிவில் வெளிக்கொணர்ந்தமைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் “சுப்பிரமணியம் செட்டியார்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் சிறந்த வணிக மற்றும் பொருளாதார பத்திரிகையாளர், மற்றும் சிறந்த பத்திரிகையாளர் விருதை வீரகேசரி பத்திரிகையின் ரொபட் சான் பெற்றுக்கொண்டார்.
அதேநேரம், ஊடகத்துறையில் ஆற்றியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் துறைவாரியான ஏனைய விருதுகளும் ஊடகவியலாளர்களுக்கு இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஊடகத்துறையில் சிறப்பாக சேவையாற்றிய ஐவர் வாழ்நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்டனர்.