4 மில்லியன் மக்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவப் பற்றாக்குறையினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் ஒரு மில்லியன் மக்கள், தடுக்கக்கூடிய கண் பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், காணப்படுகின்றனர்.

மேலும்  பத்தாயிரம் நோயாளிகள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நிலுவையில் உள்ளனர். புற்றுநோயாளிகள் தற்போது மருந்துப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு நாளாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்வதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...