45 வருட கால லண்டன் அரபு புத்தகசாலை மூடப்படுகிறது!

Date:

1978 ஆம் ஆண்டு முதல் லண்டனில் இயங்கிவந்த அல் ஸகி அரபுப் புத்தகசாலையை மூடிவிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஸல்வா கஸ்பர்ட் அறிவித்துள்ளார்.

பெருந்தொற்று காலப் பகுதியினதும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினதும் தாக்கமே இந்த 45 வருட கால புத்தக விற்பனை நிலையத்தை மூடச் செய்துள்ளது.

அரபு நாடுகளில் பெற முடியாத தடை செய்யப்பட்ட புத்தகங்களைக் கூட பெற முடியுமான இடமாக அல் ஸகி புக்ஸ் இருந்துள்ளது.

அரபுக் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கியமான தளமாகவும் இந்தப் புத்தகசாலை பணியாற்றியுள்ளது.

பாலைவனத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர்க் குவளையின் அரபுப் பெயரே இந்தப் புத்தகசாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அரபுக் கலாசாரத்தை இங்கு சுமந்து வருவதனால் பொருத்தமாகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது என உரிமையாளர் ஸல்வா தெரிவிக்கிறார்.

அரபுப் புத்தகங்களை ஆங்கிலத்தில் பதிப்பித்து வெளியிடும் பணியும் தமது புத்தகசாலை ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகவும் ஸல்வா தெரிவிக்கிறார்.

பிரெஞ்ச் – லெபனான் எழுத்தாளர் அமீன் மாலூபுடைய அரபு மொழியிலான புத்தகம் The Crusades Through Arab Eyes என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது இந்தப் புத்தகசாலை. ஸல்மான் ருஷ்தியின் ஷைத்தானிய வசனங்களை வெளியிட்ட போது இந்தப் புத்தகசாலை மீது கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து லண்டன் வருகின்றவர்களில் பெருமபாலானவர்கள் கட்டாயமாகத் தரிசிக்கும் நிலையமாக இந்தப் புத்தகசாலை இருந்து வந்துள்ளது.

பல்வேறு நாட்டவரதும் அபிமானத்தைப் பெற்ற இந்தப் புத்தகசாலை மூடப்படுவதனையிட்டு சமூக ஊடகங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...