FIFA WORLD CUP 2022: பிரேஸிலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!

Date:

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரை இறுதிக்கு குரோஷியா தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எடியூகேசன் அரங்கில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தின்போது அணித்தலைவர் நேய்மார் கோல் அடித்தார்.

எனினும், 117 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின்  புரூனோ பெட்கோவிச் அடித்த கோல் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

இதனால் மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குரோஷியா 3:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் அடித்த கோல் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையை நெய்மார் சமப்படுதினார்.

பேலே 92 போட்களில் 77 கோல்களைப் அடித்தார். நெய்மார் 124 போட்டிகளில் 77 கோல்களை அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...