GI குழாய்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபை தலைவருக்கு மறியல்!

Date:

வேலைத்திட்டம் ஒன்றிற்காக கொண்டு வரப்பட்ட 11 ‘GI’ குழாய்களை மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரது மூத்த சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்காலை நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர் தேக்கத்தின் குழாய்களை துண்டுகளாக்கி வாரியபொல லொறியில் ஏற்றிச் செல்வதாக நீர் திட்டத்தின் தலைவர் எனக் கூறப்படும் பிரதேச சபைத்தலைவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...