அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படும் நகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய இரண்டு நகர சபைகளிலும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இலகுபடுத்துவதற்காக, குறித்த நகர சபைகளை, மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் யோசனை சமர்ப்பித்திருந்தார்.

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...