உணவு வேளைகளை குறைத்துக்கொண்ட மக்கள்: தென் மாகாண மக்களே அதிகம் பாதிப்பு

Date:

இலங்கை மக்கள் தொகையில் 73 வீதமானோர் விலையிலும் போஷாக்கிலும் குறைந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் 52 வீதமானவர்கள் பெற்றுக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர்.

இலங்கை உணவு பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான புதிய அறிக்கையில் உலக உணவுத்திட்டம் இதனை கூறியுள்ளது.

அதற்கமைய 40 வீதமானனோர் உணவு சாப்பிடும் வேளைகளை குறைத்துக்கொண்டுள்ளனர்.

நாட்டின் சனத்தொகையில் 76 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு சம்பந்தமாக மாற்று வழிகளை பின்பற்றி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் தென் பகுதியில் 48 வீதமானவர்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தவிர சப்ரகமுவ மாகாணத்தில் 45 வீதமானோரும், ஊவா மாகாணத்தில் 43 வீதமானோரும், மத்திய மாகாணத்தில் 36 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனை தவிர வடமத்திய மாகாணத்தின் சனத்தொகையில் 34 வீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 31 வீதமானோரும் உணவு பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உணவு தொடர்பான பிரச்சினை குறைவாக காணப்படுவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 26 வீதமானோரும் வடக்கு மாகாணத்தில் 25 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் உலக உணவுத்திட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...

பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி: பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன்...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...