உமா ஓயா திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஃபராப் நிர்மாணப் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உமா ஓயா திட்டமானது 120 மெகாவாட் நீர் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும்.