உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வைவெட்டுக் கட்டண உயர் நிறுத்துவது குறித்து ஆராய்வு!

Date:

உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்வைத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...