ஓமல்பே சோபித தேரரின் குற்றச்சாட்டுக்கு எரிசக்தி அமைச்சர் பதில்!

Date:

இலங்கை மின்சார சபையின் கடந்தகால நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை பெருமளவு அதிகரிக்க வேண்டும் என  கஞ்சன விஜேசேகர இங்கு குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டுவதற்கு அரசாங்கமோ, மின்சார சபையோ அல்லது ஏனைய நிறுவனங்களோ மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்வரவில்லை.

இந்த மின் கட்டணத் திருத்தம், 2023-ல் நாம் கருதிய செலவிற்கு ஏற்ப கட்டணத் திருத்தம் மட்டுமே. மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு தனிநபரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான 20 முறைகளின் கீழ் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சார சபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு அமைச்சருக்கு இருக்கும் ஒரே தீர்வு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதே என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...