டயானா கமகேவின் வெளிநாட்டு கடவுச்சீட்டு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு கையளித்துள்ளார்.

அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என  ஓஷால ஹேரத் கூறுகிறார்.எனவே, அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முறைப்பாட்டாளர்  ஓஷல ஹேரத், இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...