தெல்தோட்டை – முஸ்லிம் கொலனி அல் இலாஹிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபை வருடந்தோறும் நடாத்தி வரும் பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் முஸ்லிம் கொலனி இலாஹிய்யா விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் மாணவர்கள், க.பொ.த. உயர்த்தரத்தில் உயர் தகைமைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த.சாதாரண தரத்தில் உயர் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
அதேநேரம் உயர் கல்வி நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், மௌலவி / மௌலவியாக்களாக வெளியேறியுள்ளவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்திபெற்ற மாணவர்கள், ஆகியோர்களுடன் ஊருக்கு சேவையாற்றிய மூத்தோர்களையும் பாராட்டி பரிசு வழங்கி பொன்னாடைப் போர்த்தி கௌரவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.