நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் குறைந்தது!

Date:

கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி,  கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு (AQI) 150க்கு மேல்  காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் அதே வேளையில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போன்ற உணர்திறன் கொண்ட குழுக்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் இந்தியாவில் இருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றின் விளைவாக இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக குறிப்பாக மழையுடன் கூடிய வானிலையுடன் காற்றின் தரம் ஏற்ற இறக்கமாக உள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...