நாமல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு பரிசீலிக்கப்படும்

Date:

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க முன்னிலையில் இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனியார் நிறுவனமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதாக  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று உண்மைகளை தெரிவிப்பதற்கான திகதியை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரினர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், புகாரை மீண்டும் மே 11ம்  ஆம் திகதி விசாரிக்க உத்தரவிட்டது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...