‘நியூஸ் நவ்’இன் ஊடக பணிக்கு சர்வமதத் தலைவர்கள் ஆசீர்வாதம்!

Date:

பஹன மீடியா ஊடக அமைப்பின் ‘நியூஸ் நவ்’ தமிழின் சகோதர மொழி ஊடகமான ‘நியூஸ் நவ் சிங்களம்’ 4 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும், 2022ஆம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்யப்பட்ட விசேட நிகழ்வு, அண்மையில் கொழும்பில் உள்ள ‘நியூஸ்நவ்’ காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி, கலகம தம்ம ரஸ்ஸி நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே, அல்ஹாஜ் அஷ்ஷெய்க், கலாநிதி ஹசன் மௌலானா அல்காதிரி, ஆகிய சர்வ சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கலாநிதி கலகம தம்ம ரஸ்ஸி நாயக்க தேரர் ஆசிர்வாதம் வழங்கியதுடன், தூய இலங்கைக்கான பஹன ஊடக நிறுவனத்தின் பயணம் மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள் , மக்களுக்கு தகவல்களை வழங்கி நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் நிவ்ஸ்நவ் வழங்கும் பங்களிப்பை பாராட்டினார்.

நாட்டு மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பஹன ஊடக நிறுவனத்தின் ஊடகப் பணியானது கடவுளின் ஆசீர்வாதத்தை தாமதமின்றிப் பெறும் என அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே தெரிவித்தார்.

அல்ஹாஜ் அஷ்ஷெய்க் கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரி அவர்கள், இன வேறுபாடுகளை உருவாக்கும் சில ஊடகங்களுக்கு மத்தியில் சரியான விடயங்களை சரியான முறையில் வழங்கும் ‘நியூஸ் நவ்’ இணையதளத்தின் சேவையை பாராட்டினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பஹன ஊடக நிறுவகத்தின் தலைவர் செய்யித் சாலிம் மௌலானா, சர்வமத தலைவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வைத்தார்.

விசேடமாக, நாட்டின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்திற்கான நியூஸ் நவ் மீடியாவின் சமூகப் பணியை பாராட்டி, பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் செய்யித் சாலிம் மௌலானா, பஹன ஊடக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், அப்துல் முஜீப் சாலிஹ் ஆகிய இருவரும் சர்வ மதத் தலைவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...