பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23க்கு பரிந்துரைத்து, நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய அரச உத்தியோகத்தர்கள் பற்றி உங்களுக்குத் தெரியும் எனில், உங்களுக்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த இறுதி 10 விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.