மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குள் பிரவேசிப்பவர்கள் மற்றும் மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிப்பது அவசியமானால், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றின் மூலம் அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி நிலைய வளாகங்களை புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையற்ற வலயமாக மாற்றுவது தொடர்பான சுற்றறிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அதிபர்களுக்கு மீண்டும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.