நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடன் பாடசாலையை திறப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.