போதைப்பொருள் பாவனையாளர்களுடைய எந்தவொரு குடும்ப விடயங்களிலும் சம்பந்தப்பட மாட்டோம்: காத்தான்குடி அல்அக்ஸா பள்ளிவாசல் பகிரங்க அறிவிப்பு

Date:

போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது என காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பின்வரும் விடயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.

கடந்த சில மாதங்களாக எமது பகுதியில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாகக் காணப்படுவதனால் பின்வரும் விடயங்கள் எதிர்வரும் 2023 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் தொழாதவர்களின் ஜனாஸாக்கள் எமது மையவாடியில் அவர்களுக்காக பிரேத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு நடக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....