மீடியா போரத்தின் 72 ஆவது ஊடக செயலமர்வு பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய கல்லூரியில்!

Date:

’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (7) சனிக்கிழமை காலை 9 மணி முதல் முழு நாள் கருத்தரங்காக பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெறும்.

அமைப்பின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில், பாணந்துறையிலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், கலைவாதி கலீல், சாமிலா செரீப், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர் என போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்தார்.

பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய பாடசாலையின் 97 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தின் ஊடகச் செயலாளர் கல்சூம் ஜிலானி பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவருமான என். எம். அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...