முட்டைக்கான புதிய விலை தொடர்பான அறிவித்தல்!

Date:

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரசாந்த டி சில்வா மற்றும்  கேமா ஸ்வர்ணதிப ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயம் செய்ய நேற்று கூடிய நுகர்வோர் சேவை சபை தீர்மானித்துள்ளதாக அரச சட்டத்தரணி    அறிவித்தார்.

எவ்வாறாயினும், முட்டை உற்பத்தியாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  சட்டத்தரணி குவேர டி சொய்சா, தனது வாடிக்கையாளர்கள் அந்த விலைகளுடன் உடன்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவிப்பில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைகளை விட புதிய விலைகள் குறைந்துள்ளதாகவும், அதில் திருப்தி அடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள  மனுவை விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கை பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசாரணை முடியும் வரை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...