FIFA WORLD CUP 2022 : முதல் அரையிறுதி நாளை அர்ஜென்டினா – குரோசியா அணிகள் பலபரீட்சை!

Date:

கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான உலகக்கிண்ண உதைபந்து தொடரில், 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நொக்-அவுட்  சுற்றான 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்தன.

நெதர்லாந்து, செனகல் (குழு- A), இங்கிலாந்து, அமெரிக்கா (குழு- B), அர்ஜென்டினா, போலந்து (குழு- C), பிரான்ஸ், அவுஸ்திரேலியா (குழு- D), ஜப்பான், ஸ்பெயின், (குழு- E), மொராக்கோ , குரோஷியா (குழு- F) , பிரேசில், சுவிட்சர்லாந்து (குழு- G), போர்த்துக்கல், தென் கொரியா (குழு- H) ஆகிய 16 நாடுகள்  நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் நொக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்த்துக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், காலிறுதி சுற்றுகள் நேற்று முந்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. அத்தோடு டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இறுதிப்போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...