புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில் சிறப்புடன் இயங்கி வரும் விஷேட கல்விப் பிரிவு கடந்த 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று தனது வெள்ளி விழா நிகழ்வை அதிபர் ஏ.எம்.ஜவாத் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடியது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனை விஷேட கல்வி பி.என். நீல் விஜேதாஸ அவர்கள், நகர சபை உறுப்பினர் உதவி கல்விப் பணிப்பாளர் பீ.எம்.ரிப்ராஸ், சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவான் எஎஸ்.எம்.எம்.இக்பால் ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் ஐ.எம்.தாஜீம் ஆகியோர்களுடன் அரசியல், ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் என பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
மேலும், மாற்றுத்திறாளிகளின் ஆக்கங்கள் கண்காட்சியுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியதுடன் அவர்களது கலை நிகழ்ச்சிகள் விழாவை களைகட்டச் செய்தன.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விஷேட கல்வித் துறைக்கு பல்வேறு விதத்தில் பங்களிப்புச் செய்தவர்களுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
உதவிக்கல்விப் பணிப்பாளர் நீல் விஜேதாஸ அவர்கள் செய்னப் அதிபர் எஸ்.ஐ.எல்.முஸம்மில், தொண்டர் ஆசிரியை எம்.ஏ.எஸ். ஜரீனா ஆகியோருக்கு சிறப்பான சேவையை வழங்கியமைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கியமைக்காக வை.எம்.என்டர்பிரைசஸ் பிரைவெட் லிமிடட் கேக் சென்டர், நாஸா ஐஸ் கிரீம் ஆகிய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இப் பிரிவின் அபிவிருத்திக்காக பங்காற்றிவருவதை கௌரவிக்கும் முகமாக மொகிதீன் ஜும்ஆ மஸ்ஜித், PHD அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘முன்மாதிரி தாய்க்கான விருதினை ஏ.சித்தி சலீமா அவர்கள் பெற்றுக்கொண்டார். விஷேட கல்விப் பிரிவு தொடர்பில் அக்கறையுடன் செயற்படும் அதிபர் ஏ.எம்.ஜவாத் பெற்றோர் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
விஷேடமாக 22 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக இப் பிரிவினை வழிநாத்தி ஓய்வு பெற்றுச்செல்லும் பிரதி அதிபர் எம்.எச்.எம்.நதீர் அவர்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். இது தவிர விஷேட கல்விப் பிரிவன் எதிர்கால அபிவிருத்தி கருதி நிதிசேகரிக்கும் முகமாக கலண்டர் வெளியீடும் இடம்பெற்றது.
விழாவின் தொனிப் பொருளாக ‘அனுதாபம் வேண்டாம் ஆதரவு தாருங்கள்’ எனும் கோஷம் ஆட்கொண்டிருந்தமை இந் நிகழ்வின் விஷேட அம்சமாகும். நிகழ்ச்சிகளை உதவி அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்;சி அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.