இன்று நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்

Date:

இன்று நாட்டில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேளையில் குளிரான காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை...

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...