இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை!

Date:

இலங்கையின் மிகப் பெரிய கரிம உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பன்னலவில் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.

கொரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான  நிறுவனமான Hyosong OnB,  தொழிற்சாலையிலிருந்து 100வீத சுற்றுச்சூழலுக்கு உகந்த கரிம சிறுமணி உரங்களைத் தயாரிக்கிறது.

இத்தொழிற்சாலையானது முழுமையாக உயர்தொழில்நுட்ப உபகரணங்களுடன் பொருத்தப்பட்டிருப்பதாகவும், கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்கு ரோபோ தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலுக்குத் தேவையான 1800 மெட்ரிக் தொன் உயர்தர கரிம உரங்களை உற்பத்தி செய்யவுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூங்ஜின் ஜியோங், விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோரும் Hysong OnB Granular உர நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...