உள்ளூராட்சி தேர்தல்: சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாகவே போட்டியிட்டதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அரசியல் அரங்கில் அதன் நிலையை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இ.தொ.கா சுயேட்சையாக கட்சி சின்னத்தில் போட்டியிடும் போது ஏனைய அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதம் ஓரளவு குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக போட்டியிடுவது இ.தொ.கா.வுக்கு பாதகமானது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...