கம்பளையில் தனியார் வங்கியின் ATM இயந்திரம் கொள்ளை: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாதுகாப்பு அதிகாரி மீட்பு

Date:

கம்பளை நகரில் கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலையளவில் நான்கு சந்தேகநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றாக அகற்றி கொண்டு சென்றுள்ளனர்.

ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவொன்று அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை நாற்காலியில் கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் வைப்பு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு நவீன வேன் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரி கயிறுகளை அவிழ்த்து வங்கியின் ‘எமர்ஜென்சி ஹார்னை’ அடித்து வேனின் எண்ணை எழுதி வைத்தார்.

பின்னர் தரையில் பொருத்தப்பட்டிருந்த பண வைப்பு இயந்திரத்தை வெளியே இழுத்து மேலே தூக்கி வேனில் ஏற்றி விட்டு தப்பி ஓடிவிட்டதாக பாதுகாவலர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேவேளை சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் வேனை இன்று காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...