கஹட்டோவிட்ட மண்ணின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழா இன்று (29) பிற்பகல் 1.30 மணிக்கு கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தொடர் நிறைவடைந்த பின் பல சமூகப் பணிகளை செய்து வரும் KPL Foundation அமைப்பானது இம்முறை பிரதான அனுசரணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘போதைப்பொருள் வேண்டாம் என்று சொல்லுங்கள்’
(Say No to Drugs @ Kahatowita) என்ற தொனிப்பொருளுடன் தொடரை ஆரம்பிக்கின்றது.
2012ம் ஆண்டு எட்டு அணிகளுடன் கம்புறாகல்ல பாடசாலை மைதானத்தில் ‘KPL’ தொடர் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய ஒவ்வொரு வருடமும் இலங்கை சுதந்திர தினத்தை மையமாக வைத்து நடைபெறும் இந்தத் தொடர் படிப்படியாக வளர்ந்து இவ்வருடம் மொத்தமாக 19 அணிகளின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
264 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த வருடத்துக்கான தொடரில் மொத்தமாக 35 போட்டிகள் நடைபெறவுள்ளது.
முறையே 40 வயதுக்கு உட்பட்ட மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவு அடிப்படையில் இரண்டு சாம்பியன் கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏலவே போட்டிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்க அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் நபவிய்யா தரீக்கா இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மதியம் 1.30மணிக்கு முதல் போட்டி ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
இவ் வருடத்துக்கான முதல் போட்டியில் அனுபவம் வாய்ந்த ரிஸ்வி தலைமையிலான Central stallion அணியை எதிர்த்து Kurawalana Eagles தனது புதிய தலைவரான நஸ்ரின் வழிகாட்டலில் களமிறங்குகிறது.