‘சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலை இல்லை’

Date:

சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீரை வழங்கக்கூட  பணம் இல்லை என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே  தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே  இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலையை கொள்வனவு செய்யவும் எனக்கு வழியில்லை. அமைச்சின் செலவுகளுக்கு பணமில்லை.

இப்படியான நிலைமை நிலவும் நாட்டில் எப்படி 10 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவது. 10 பில்லியன் ரூபா செலவில் இது முடிந்து விடாது.

வாக்குச்சீட்டுக்களுக்கான காகிதங்களையும் மை போன்றவற்றையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அவை இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...