‘தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள், சாலிய பீரிஸை இரகசியமாக சந்தித்துள்ளனர்’

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான தெரிவித்துள்ளார்.

இந்தவிடயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான தெரிவித்துள்ளார்.

சுயாதீன அமைப்பான தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடும் போது குறிப்பிட்ட சிலருடன் இரகசியமாக கலந்துரையாட முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் இரகசிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவ்வாறு கலந்துரையாடினால் சட்டமா அதிபருடன் மாத்திரமே கலந்துரையாட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அவமதிக்கப்படுவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் மூலம் ஆணைக்குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...