ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தமக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும், ஆனால் தனது சகோதரர் மைத்திரிபால தான் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு தனது சகோதரருக்கு பண உதவி வழங்குவீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.100 மில்லியன் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.