பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து – 50 பேர் உயிரிழப்பு

Date:

பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் இன்று(ஜன.29) பலோச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து  பயணிகளுடன் பேருந்து ஒன்று, கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.

லாஸ்பேலா என்ற இடத்தில் வளைந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தூணில் மோதிய பேருந்து கீழே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு குழந்தை, ஒரு பெண்மணி உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே உயிருடன்
மீட்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....