இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடை செய்து கோட்டை நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் வீதியில் காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் உத்தரவை கோரியுள்ளனர்.
இதன்படி, காலி முகத்திடல் மைதானத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடை செய்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.