மக்கள் மீது அபராதம் விதித்து வனஜீவராசிகள் திணைக்களம் ஈட்டிய வருமானம்?

Date:

வனஜீவராசிகள் திணைக்களம் 2022ஆம் ஆண்டில் எழுபது இலட்சம் ரூபாவை ஈட்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்  மகிந்த அமரவீர வனஜீவராசிகள் திணைக்களத்துடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

காடு மற்றும் வனவிலங்குகளை சேதப்படுத்தியதாக மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களம் 2022 நவம்பருக்குள் ஈட்டிய மொத்த வருமானம் 1421 மில்லியன் ரூபாவாகும். இந்தப் பணத்தின் பெரும்பகுதி உரிமக் கட்டணங்கள் மூலம் பெறப்படுகிறது.

யால தேசிய பூங்கா மற்றும் வில்பத்துவ மற்றும் வஸ்கமுவ தேசிய பூங்காக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வேலைத்திட்டங்களை இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நாட்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நாடு திரும்புவதால், தேசிய பூங்காக்களுக்கு டிக்கெட் வழங்குவதற்கும் தாமதங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...