மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அறிவிக்குமாறு கோரிக்கை!

Date:

இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் ஏதும் விதிக்கப்பட்டால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்: 0775687387
மின்னஞ்சல்: consumers@pucsl.gov.lk
தொலைநகல்: 0112392641

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...