Wednesday, November 11, 2026

வெள்ள அனர்த்தங்களைத் தடுக்க முன்கூட்டியே தயாராக வேண்டும்; பிரதமர் ஹரிணி!

1 min read

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் திடீர் அனர்த்தங்கள் மற்றும் அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கும், அவற்றினால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைப்பதற்கும் முன்னாயத்த நடவடிக்கைகள் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவம் என்பது ஒரு துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் கடந்த நவம்பர் 06ஆம் திகதி பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், நேற்று (10) நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சியின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கொழும்பு மாவட்டமும் கொழும்பு நகரமும் தனித்துவமான புவியியல் மற்றும் நகர்ப்புற அமைப்புகளைக் கொண்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகள் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கழிவு முகாமைத்துவம், நீர்வழிகளை முறையாகப் பராமரித்தல் மற்றும் தாழ்நிலப் பகுதிகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விரிவான வேலைத்திட்டங்கள் ஊடாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளக் கட்டுப்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும்