தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ‘ஸ்ரீலங்காபிமன்யா’ பட்டத்தை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
தற்போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராகவும், முன்பு சபாநாயகராகவும் இருந்த 82 வயதான அவர், இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் எட்டாவது நபர் ஆவார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொண்டதுடன், டபிள்யூ டி அமரதேவ 2017 ஆம் ஆண்டு அதனைப் பெற்றுக்கொண்டார்.
சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான ஏ.டி.ஆரியரத்னவுக்கு 2007 இல் ஸ்ரீலங்காபிமன்யா என்ற பட்டம் வழங்கப்பட்டதுடன், இந்த கௌரவத்தைப் பெற்று வாழும் ஒரேயொருவரும் ஆவார்.
பெப்ரவரி 3ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பதவியேற்பு நிகழ்வின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கரு ஜயசூரிய இந்தப் பட்டத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்வார்.
இலங்கைக்கு மிகச்சிறந்த மற்றும் சிறந்த சேவையை வழங்கிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.