இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் (02.01.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நூறு வருடங்களைக் கடந்து வெற்றி நடை போடும் விவசாயத் திணைக்களத்தின் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பணி புரியும் பல்லாயிரம் சேவையாளர்களினதும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவரது சேவைக் காலத்தில் நமது நாட்டு விவசாய பெருமக்களும் தங்கள் உற்பத்தியில் தன்னிறைவடைந்து நம் தேசமும் வளமடைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் எமது தாய் நாட்டுக்கான பணி மேன்மேலும் உயர்வடைந்து புகழ் பெற வேண்டுமென ‘நியூஸ் நவ்’ வாழ்த்துகின்றோம்!