வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமிழ் பெண் நியமனம்!

Date:

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் (02.01.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நூறு வருடங்களைக் கடந்து வெற்றி நடை போடும் விவசாயத் திணைக்களத்தின் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பணி புரியும் பல்லாயிரம் சேவையாளர்களினதும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவரது சேவைக் காலத்தில் நமது நாட்டு விவசாய பெருமக்களும் தங்கள் உற்பத்தியில் தன்னிறைவடைந்து நம் தேசமும் வளமடைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் எமது தாய் நாட்டுக்கான  பணி மேன்மேலும் உயர்வடைந்து புகழ் பெற வேண்டுமென ‘நியூஸ் நவ்’ வாழ்த்துகின்றோம்!

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...