நாட்டின் மருத்துவமனைகளுக்கு முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.
முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதையடுத்து வைத்தியசாலைகளுக்கு முட்டை வழங்குவதை நிறுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்தார்.
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காயப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சிறப்பு உணவு வகைகளை வழங்க வேண்டிய நோயாளிகள், புரதச் சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் போன்ற நோயாளிகளுக்கு கூட முட்டை கொடுக்க முடியவில்லை.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 10,000 முட்டைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 12,000 முட்டைகள் என வைத்தியசாலை அமைப்புக்கு நிறைய முட்டைகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
எனவே அரசு உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது மருத்துவமனைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.