சர்வதேச கால்பந்து ஜாம்பவான் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் (Riyadh) சென்றுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் ரொனால்டோவை, சவூதி அரேபியா அல் நாசர் கால்பந்து கிளப் சுமார் ஆயிரத்து 750 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
இதன்பிறகு அவரது பெயரில் வெளியிடப்பட்ட ஜெர்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அல் நாசர் அணியில் இணைவதற்காக சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திற்கு ரொனால்டோ சென்றடைந்தார்.
ரொனால்டோவின் வருகையை ஒட்டி, விமான நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
25,000 ரசிகர்கள் அமரக்கூடிய மெர்சூல் பூங்கா காற்பந்து அரங்கத்தில் உள்ளூர் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்தும், உரிமையாளர்கள் குறித்தும் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் முடித்துக் கொண்டது.
இதனிடையே பியர்ஸ் மோர்கன் உடனான நேர்காணலின் போது,
மான்செஸ்டர் யுனைடெட் அணி இல்லையென்றாலும், ஐரோப்பா கால்பந்து லீக்கை விடுத்து வேறு எந்த கால்பந்து லீக்கிலும் விளையாடப் போவதில்லை. அமெரிக்கா, சவூதி அரேபியா லீக் தொடரில் விளையாட மாட்டேன் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆணவத்துடன் செயல்படுவதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
கால்பந்து விளையாட்டில் ரொனால்டோவின் சரிவு தொடங்கிவிட்டதாகவும் கால்பந்து பத்திரிகைகள் விமர்சித்தன.
இதனிடையே 65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணிக்காக 2025 ஆம் ஆண்டு வரை விளையாட ரூ.4,400 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இதில் அல் நஸர் அணியின் ஜெர்சி அணிந்து ரசிகர்கள் முன் ரொனால்டோ, தோன்ற சவூதி அரேபியா ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர்.
தனது உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்த அவரை வரவேற்று ரியாத் நகரம் முழுவதும் “ஹாலா ரொனால்டோ” என டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்பட்டன.
ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட லீக் போட்டிகளில் ரொனால்டோ கால்பந்து விளையாடி இருந்தாலும், ஆசியாவைச் சேர்ந்த அணிக்காக ரொனால்டோ முதல்முறையாக விளையாட உள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின், என்னை ஒப்பந்தம் செய்ய பலரும் அணுகினார்கள். ஐரோப்பாவில் பல அணிகள் தொடர்பு கொண்டன. பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஏன் போர்ச்சுகலில் இருந்து கூட எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் அல் நஸர் அணிக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன்.
அல் நஸர் அணி நிர்வாகிகள் கால்பந்து விளையாட்டை மட்டும் முன்னேற்ற விரும்பவில்லை. அவர்களின் நாட்டையும் சேர்த்து முன்னேற்ற விரும்புகின்றனர்.
ஐரோப்பாவில் எனது பங்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆசியாவில் புதிய சவாலை ஏற்றுள்ளேன். எனக்கு எது தேவை என்பதோடு, எது தேவையில்லை என்பது நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
Thank you Riyadh for the warm welcome! Look forward to seeing you at the stadium tonight💛💙 pic.twitter.com/0AsT4wLdYq
— Cristiano Ronaldo (@Cristiano) January 3, 2023