சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் வகிபாகம் சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல. அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் தானே தலைமை பதவியை கேட்டதாக கூறியது தெரியாத கதை என அவர் தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாதது ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும். அதன்படி இன்று முதல் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.