இதுவரை இலங்கைக்கு 72,002 சுற்றுலாப் பயணிகள் வருகை!

Date:

இந்த வருடத்தில் இதுவரை 72,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

மாதத்தின் 21 நாட்களில் ரஷ்யாவிலிருந்து 17,474 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 9,181 பேரும், ஜேர்மனியிலிருந்து 6,269 நபர்களும், பிரித்தானியாவிலிருந்து 5,933 பேரும், பிரான்சிலிருந்து 3,342 நபர்களும் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, எதிர்ப்புகள் மற்றும் வெளிப்புற காரணிகளால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...