இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று!

Date:

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று இடம்பெறவுள்ளது..

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது.

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைவராக டொம் லதமும், டி20 தொடருக்கு சான்ட்னரும் தலைவராகவும் செயல்படுகிறார்கள்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கையை 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

அணித்தலைவர் ரோகித் சர்மா, முன்னாள் தலைவர் விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

டொம் லதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

இரு அணிகளும் இன்று மோதுவது 114-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 113 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 7 போட்டிகள் முடிவு இல்லை. இந்நிலையில் இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணி வீரர்களின் விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா (தலைவர்), ஹர்திக் பாண்ட்யா (துணை தலைவர்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத்.

நியூசிலாந்து: டொம் லதம் (தலைவர்), பின் ஆலன், பிலிப்ஸ்,ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் செப்மென், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், ஆடம் மில்னே, மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, சோதி ஹென்றி.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...