‘இன்று முதல் கதிர்காமம் – கொழும்பு சொகுசு பேருந்துகள் இயங்காது’ – போக்குவரத்து அமைச்சர்

Date:

கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பஸ்கள் இன்று (ஜனவரி 4) நள்ளிரவு முதல் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என  அமைச்சர்  தெரிவித்தார்.

அதன்படி, அந்த வழித்தடத்தில் வழக்கமான பேருந்துகள் மற்றும் சொகுசு பேருந்துகள் வழமையாக இயங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல், அரை சொகுசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் கட்டணம் ரூ.1,541ல் இருந்து ரூ.1,117 ஆக குறைக்கப்படுகிறது.

இதன் மூலம் 1,541 செலுத்தி கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்த பயணிகள் அதே பேருந்தில் 1,117 செலுத்தி பயணிக்கலாம்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு 28 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...